உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / த.வெ.க.,வில் இணைந்த பிரபல நடிகர்கள்

த.வெ.க.,வில் இணைந்த பிரபல நடிகர்கள்


நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தி.மு.க., சிறுபான்மை நல பிரிவு நிர்வாகியான ஜெ.எம்.பஷீர், 100க்கும் மேற்பட்டோருடன் நேற்று த.வெ.க.,வில் இணைந்தார்.
'தேசிய தலைவர்' படத்தில் முத்துராமலிங்கர் வேடத்தில் நடித்து பிரபலமானவர் ஜெ.எம்.பஷீர். தற்போது அம்பேத்கர் வரலாற்று படத்தில் அம்பேத்கராக நடித்து வருகிறார்.

இவர் தி.மு.க.,வில் சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில துணை செயலராக இருந்துள்ளார். இவர் தன் ஆதரவாளர்கள் 100 பேருடன் நேற்று த.வெ.க., பொதுச் செயலர் ஆனந்த் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தார்.

பஷீர் கூறுகையில், ‛முதல்வர் விஜய் தன் முதல் சட்டசபை உரையில் இது சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் அரசு என்றார். காயிதேமில்லத்தின் பிறந்தநாளில் அவரது நினைவிடத்திற்தகு வந்து மரியாதை செலுத்தினார். வெறும் காலுடன் செருப்பு கூட அணியாமல் மரியாதை செய்த முதல் முதல்வர் அப்படி மரியாதை செய்த போதே நாங்கள் அவரை எங்களின் உண்மையான தலைவராக ஏற்றுக் கொண்டோம். விரைவில் ஓ.பன்னீர்செல்வமும் த.வெ.க.,வில் இணைய வேண்டும்' என்றார்.

நடிகர் பஷீர் உடன், நடிகரும் இயக்குனருமான ரவி மரியாவும் தவெக.,வில் இணைந்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !