கடந்த 2002ம் ஆண்டில் அர்ஜூன் இயக்கி, நடித்து தமிழில் வெளியான படம் 'ஏழுமலை'. இதில் சிம்ரன், விஜயகுமார், மும்தாஜ், கஜாலா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். அந்த காலகட்டத்தில் இது கமர்ஷியல் வெற்றி படமாகவும் அமைந்தது. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்க்கு இந்த படத்தில் இடம்பெற்ற மணிசர்மா பின்னணி இசையில் அர்ஜூன் நடந்து வரும் காட்சிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.
சமீபத்தில் அர்ஜுன் நடித்து வெளிவந்த 'பிளாஸ்ட்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அவரை தேடி பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சென்றுள்ளனர். ஆனால், அர்ஜுன் தற்போது ஏழுமலை இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறி அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அர்ஜூன் 'ஜெய்ஹிந்த் 2' படத்தை இயக்கி சொதப்பினார். இப்போது இதையும் சொதப்பி விடுவாரோ என்கிற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.