ஜூலை 17 ரிலீஸ் படங்கள், அப்படியே வந்துவிடுமா?
ஒவ்வொரு வாரமும் படங்களைப் பற்றிய அறிவிப்பை ஓரிரு வாரங்களுக்கு முன்பே அறிவித்துவிடுவார்கள். சில படங்களுக்கு மட்டும்தான் நீண்ட நாட்களுக்கு முன்பே அறிவிக்கிறார்கள்.
ஜனவரி 9ம் தேதி வர வேண்டிய விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் காரணமா மிகவும் தாமதமாகியது. கடந்த வாரம் அது கிடைக்கப் பெற்றநிலையில் அப்படம் எப்போது வெளிவர உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த வாரம் ஜூலை 24ல் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஒரு வாரம் முன்னதாக, ஒரு வாரம் பின்பாக படங்களை வெளியிடத் தயங்குவார்கள். 'ஜனநாயகன்' படத்தால் இந்த மாதப் படங்களின் வெளியீட்டில் மாறுதல் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த வாரம் ஜூலை 17ம் தேதியன்று, “அர்ஜுனன் பேர் பத்து, அருள்வான், அன்பே டயானா, தி டார்க் ஹெவன், கண் இமைக்கும் நேரத்தில், நாடோடி கூட்டம்,” ஆகிய படங்கள் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிவிக்கப்பட்ட படங்கள் அப்படியே வந்துவிடுமா அதில் ஏதும் மாற்றங்கள் இருக்குமா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்.