உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தாயின் போராட்டத்தை சினிமாவில் கொண்டு வந்த கே.பாலாஜி

பிளாஷ்பேக் : தாயின் போராட்டத்தை சினிமாவில் கொண்டு வந்த கே.பாலாஜி

கே.கிருஷ்ணமாச்சாரி என்கிற பாலாஜி அடிப்படையில் ஒரு மலையாளி. புகழ்பெற்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.ரங்காச்சாரியின் பேரன். பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பாலாஜியின் குடும்பத்தினர் புறக்கணிக்கப்பட்டனர். சினிமா ஆர்வம் மிக்க பாலாஜி, சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டே தொலைபேசி துறையில் பணியாற்றி வந்தார். அவருக்கு சினிமா தயாரிக்க வேண்டும் என்பதே பெரிய கனவாக இருந்தது.

இந்த காலகட்டத்தில் பாலாஜியின் தாயார் சொத்தில் பங்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் முடிவில் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பெரிய பங்களா அவருக்கு கிடைத்தது. அதை மகனிடம் கொடுத்து இதை விற்று உன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள் என்றார். அதன்பிறகு கே.பாலாஜி படத் தயாரிப்பில் இறங்கினார்.

அவர் நடித்த படங்களில் முக்கியமானது 'உத்தமி பெற்ற ரத்தினம்'. காரணம் இந்த படத்தின் கதையும், அவரது தாய் நடத்திய சட்ட போராட்டமும் ஒன்று. பல வெற்றி படங்களைத் தயாரித்த எம்.எம்.ஏ. சின்னப்பா தேவர், 'அமரா புரொடக்ஷன்ஸ்' என்ற பேனரின் கீழ் இந்த படத்தை தயாரித்தார். எம்.ஏ.திருமுகம் இப்படத்தை இயக்கினார். தேவர் பிலிம்ஸின் நிரந்தர எழுத்தாளரான ஆரூர்தாஸ் திரைக்கதையை எழுதினார். தெலுங்கு இசையமைப்பாளர் டி. சலபதிராவ் இசையமைத்தார்.

'சபாஷ் மீனா' படத்தின் மூலம் புகழ் பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த மாலினி கதாநாயகியாக நடித்தார். இவருக்குத் துணையாக டி.கே. ராமச்சந்திரன், எஸ்.வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், கண்ணாம்பா, எஸ்.வி. சுப்பையா மற்றும் பி.டி. சம்பந்தம் நடித்தனர். மனோரமா மற்றும் குலதெய்வம் ராஜகோபால் ஆகியோர் நகைச்சுவை ஜோடியாக நடித்தனர். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !