உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : மகளை அறிமுகப்படுத்த படம் தயாரித்த லட்சுமி

பிளாஷ்பேக் : மகளை அறிமுகப்படுத்த படம் தயாரித்த லட்சுமி

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்த அவரே 'கவிதா சித்ரா' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்த படம் 'நியாயங்கள் ஜெயிக்கட்டும்'. இந்த படத்தில் அவர் ஐஸ்வர்யாவின் அம்மாவாகவே லட்சுமி நடித்தார். அப்பாவாக சிவகுமார் நடித்தார். லட்சுமியின் கணவர் ஜெயச்சந்திரன் இயக்கினார்.

இந்த படத்தில் வினோத்குமார் என்ற புதுமுகம் ஐஸ்வர்யாவின் ஜோடியாக நடித்தார். ஜெயச்சந்திரனும் முக்கிய கேரக்டரில் நடித்தார். இவர்களுடன் எஸ்.எஸ்.சந்திரன், கிட்டி, ஜெய் கணேஷ், கோவை சரளாள உள்ளிட்ட பலர் நடித்தனர். சங்கர், கணேஷ் இசை அமைத்தனர். இது இரண்டு அரசியல்வாதிகளின் மோதல் காரணமாக அவர்கள் குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றிய கதை. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !