ராக்கா படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை நைலா கிரேவால்
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ராக்கா படத்தில் அல்லு அர்ஜூன் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். பேண்டஸி ஆக்ஷன் டிராமா படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை நைலா கிரேவாலும் இந்த பிரம்மாண்ட படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி நைலா கூறுகையில், ராக்கா படம் உருவாக்கம் மற்றும் கதாபாத்திர சித்தரிப்பு என அனைத்து அம்சங்களிலும் புதிய எல்லைகளைத் தொடும். வழக்கமான எதார்த்தமான கதாபாத்திரங்களில் இருந்து விடுபட்டு, முற்றிலும் மாறுபட்ட ரோலில் நடிக்கும் போது, அது உண்மையிலேயே அசாதாரணமான அனுபவமாக இருக்கும் . அல்லு அர்ஜூனுடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம். அவர் தனது முந்தைய படங்களின் மூலம் அடைந்த வெற்றியையும் உயரத்தையும் தாண்டி, இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்றுஒப்பிட முடியாத கவனத்தையும் பசியையும் கொண்டிருக்கிறார். இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு படைப்பிற்கு உயிர் கொடுக்க தேவையான அர்ப்பணிப்பையும் விடாமுயற்சியையும் நேரில் பார்ப்பது ஒரு மாஸ்டர் கிளாஸ் பாடத்தைப் போல உணர்வதாகக் கூறியுள்ளார்.