6 நாட்களிலேயே 1 பில்லியன் டாலர் வசூலைக் குவித்த ‛ஸ்பைடர்மேன்'
டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடிப்பில் கடந்தவாரம் உலகளவில் வெளியான ஹாலிவுட் படம் ‛ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே'. ரசிகர்கள் வரவேற்புடன் வசூலை வாரி குவித்து வருகிறது. சுமார் 2000 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், 6 நாட்களில் 1.05 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
உலக சினிமா வரலாற்றில் மிக விரைவாக 1 பில்லியன் டாலர் வசூலைக் குவித்த இரண்டாவது படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது. முதலிடத்தில் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் உள்ளது. இந்த படம் 5 நாளில் 1 பில்லியன் டாலர் வசூலை எட்டியிருந்தது.
பொதுவாக ஹாலிவுட் படங்களுக்கு அதிலும் ஸ்பைடர்மேன் படங்களுக்கு இந்தியாவிலும் வரவேற்பு நன்றாகவே இருக்கும். கடந்த 6 நாட்களில் மட்டும் இப்படம் இந்தியாவில் ரூ.362 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்த ஆண்டில் 'டாய் ஸ்டோரி 5', 'மைக்கேல்', 'தி சூப்பர் மரியோ கேலக்ஸி மூவி' ஆகிய படங்களும் 1 பில்லியன் டாலர் வசூலை குவித்துள்ளன.