தமிழ் திரையில் மிரட்டிய துப்பறியும் மற்றும் கிரைம் திரில்லர் கலந்த நவீன சினிமாக்கள்
தமிழ் சினிமாவில் ரசிகர்களை சீட்டின் விளிம்பிற்கே கொண்டு வந்த, திருப்பங்களும் விறுவிறுப்பும் நிறைந்த படங்கள் அவ்வப்போது வருவதுண்டு. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இந்தக்கால இளைஞர்களையும் போராடிக்காமல் 2 முதல் 3 மணி நேரம் ஒரே இடத்தில் இருக்க வைத்த சில சிறந்த துப்பறியும் மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படங்களின் பட்டியல் இதோ...
1. வேட்டையாடு விளையாடு (2006)
இயக்கம் : கவுதம் மேனன்
நடிப்பு : கமல்ஹாசன், ஜோதிகா,
சிறப்பு : சென்னையில் தொடங்கும் தொடர் கொலைகளுக்கான விடையைத் தேடி அமெரிக்கா வரை செல்லும் ராகவன் என்ற போலீஸ் அதிகாரியின் ஸ்டைலிஷ் புலனாய்வு.
2. அஞ்சாதே (2008)
இயக்கம்: மிஷ்கின்
நடிப்பு: நரேன், பிரசன்னா
சிறப்பு: கடத்தல் கும்பல் மற்றும் குற்ற உலகத்தை அடிப்படையாகக் கொண்ட படம். நண்பர்களாக இருக்கும் இருவர், சூழ்நிலையால் ஒருவர் போலீசாகவும் மற்றொருவர் குற்றவாளியாகவும் மாறும் போது நடக்கும் விறுவிறுப்பான விசாரணை.
3. துருவங்கள் பதினாறு (2016)
இயக்கம்: கார்த்திக் நரேன்
நடிப்பு: ரஹ்மான்
சிறப்பு: ஒரே இரவில் நடக்கும் ஒரு கொலையும், அதைத் சுற்றியுள்ள பல மனிதர்களின் தொடர்புகளையும் துப்பறியும் நுட்பமான மிஸ்டரி த்ரில்லர். படத்தின் கிளைமாக்ஸ் திருப்பம் மிகப்பெரிய பிளஸ்.
4. விசாரணை (2016)
இயக்கம்: வெற்றிமாறன்
நடிப்பு: அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி
சிறப்பு: அதிகார வர்க்கம், போலீஸ் விசாரணை மற்றும் குற்ற உலகத்தின் நிஜமுகத்தைத் தோலுரித்துக் காட்டிய தேசிய விருது பெற்றத் திரைப்படம்.
5. தீரன் அதிகாரம் ஒன்று (2017)
இயக்கம்: எச். வினோத்
நடிப்பு: கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்
சிறப்பு: 1990-களில் தமிழகத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட துப்பறியும் படம். கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களைத் தத்ரூபமாகப் படம் பிடித்திருப்பார்கள்.
6. துப்பறிவாளன் (2017)
இயக்கம்: மிஷ்கின்
நடிப்பு: விஷால், பிரசன்னா
சிறப்பு: பிரபல ஆங்கிலக் கதையான 'ஷெர்லாக் ஹோம்ஸ்' பாணியில் உருவான படம். ஒரு சிறிய நாயின் இறப்பில் தொடங்கும் வழக்கு, மிகப்பெரிய குற்றப்பின்னணியை நோக்கிச் செல்லும் விறுவிறுப்பான திரைக்கதை.
7. விக்ரம் வேதா (2017)
இயக்கம்: புஷ்கர் - காயத்ரி
நடிப்பு: மாதவன், விஜய் சேதுபதி
சிறப்பு: நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் தந்திரமான ரவுடிக்கும் இடையேயான தத்துவார்த்த மற்றும் துப்பறியும் மோதல்.
8. 8 தோட்டாக்கள் (2017)
இயக்கம்: ஸ்ரீ கணேஷ்
நடிப்பு: வெற்றி, அபர்ணா பாலமுரளி
சிறப்பு: ஒரு நேர்மையான இளம் போலீஸ் அதிகாரி தனது சர்வீஸ் துப்பாக்கியைத் தொலைத்து விடுகிறார். அது ஒரு கொள்ளைக் கும்பலின் கைக்கு செல்ல அதன்பின் என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக எதார்த்தமாக பேசிய படம்.
09. இமைக்கா நொடிகள் (2018)
இயக்கம்: அஜய் ஞானமுத்து
நடிப்பு: நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப்
சிறப்பு: சிபிஐ அதிகாரி நயன்தாராவிற்கும், ஸ்மார்ட்டான சைக்கோ கடத்தல்காரனுக்கும் இடையேயான பூனை-எலி விளையாட்டு.
10. யூ டர்ன் (U Turn - 2018)
இயக்கம்: பவன் குமார்
நடிப்பு: சமந்தா, ஆதி
சிறப்பு: மேம்பாலத்தில் நடக்கும் சிறிய போக்குவரத்து விதியை மீறுபவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இதற்கான காரணத்தை ஒரு பெண் நிருபரும், போலீஸ் அதிகாரியும் இணைந்து துப்பறியும் கதை.
11. ராட்சசன் (2018)
இயக்கம்: ராம்குமார்
நடிப்பு: விஷ்ணு விஷால், அமலா பால்
சிறப்பு: தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த 'சீரியல் கில்லர்' சைக்கோ திரில்லர் திரைப்படம். பள்ளி மாணவிகளைக் கடத்தும் கொடூரமான குற்றவாளியைக் கண்டுபிடிக்கப் போராடும் ஒரு இளம் போலீஸ் அதிகாரியின் கதை.
12. கே-13 (2019)
இயக்கம்: பரத்
நடிப்பு: அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்
சிறப்பு: மூடப்பட்ட ஒரு வீட்டிற்குள் நடக்கும் கொலை. யார் கொலையாளி என்பதை இறுதிவரை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பல திருப்பங்களைக் கொண்ட குறுகிய இடப் பின்னணி த்ரில்லர் படம்.
13. தடம் (2019)
இயக்கம்: மகிழ் திருமேனி
நடிப்பு: அருண் விஜய்
சிறப்பு: ஒரே தோற்றம் கொண்ட இரட்டைச் சகோதரர்களில் யார் கொலையாளி என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறும் சுவாரஸ்யமானக் கதை.
14. சைக்கோ (2020)
இயக்கம்: மிஷ்கின்
நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன்
சிறப்பு: பார்வை அற்ற ஒரு இளைஞன், தொடர் கொலைகாரனால் கடத்தப்பட்ட தன் காதலியைத் தேடிக் கண்டுபிடிக்கும் வித்தியாசமான துப்பறியும் கதை.
15. போர் தொழில் (2023)
இயக்கம்: விக்னேஷ் ராஜா
நடிப்பு: சரத்குமார், அசோக் செல்வன்
சிறப்பு: ஒரு அனுபவமிக்க மூத்த போலீஸ் அதிகாரியும், புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்த இளைஞனும் இணைந்து தொடர் கொலைகளைப் பற்றி துப்பறியும் நேர்த்தியான த்ரில்லர்.