உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை மீண்டும் பார்க்க விரும்புகிறேன் : கார்த்தி

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை மீண்டும் பார்க்க விரும்புகிறேன் : கார்த்தி

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ள இப்படம் இன்று தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் உணர்வுப்பூர்வமான கதையம்சம், குடும்ப உறவுகள் மற்றும் சூர்யா-மமிதா பைஜூவின் நடிப்பு ஆகியவை பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் முதல்பாதி நன்றாக உள்ளது, இரண்டாம் பாதி அப்படி இல்லை என கலவையான விமர்சனங்கள் வருகின்றன.

இந்நிலையில் சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி இப்படத்தைப் பார்த்துவிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், மறக்க முடியாத கதாபாத்திரங்களுடன் ஒரு முழுமையான கதையை வழங்கியதற்காக இயக்குநர் வெங்கி அட்லூரியை பாராட்டியுள்ள அவர், சூர்யாவின் சிறப்பான நடிப்பு, மமிதா பைஜுவின் துடிப்பான நடிப்பு மற்றும் ராதிகா சரத்குமாரின் சிறப்பான பங்களிப்பு ஆகியவற்றையும் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், தயாரிப்பாளர் நாக வம்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கார்த்தி, இப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !