ஒரே ஆண்டில் ஹாட்ரிக் 100 கோடி அடித்த மமிதா
சம்பளத்தை தவிர மற்ற விஷயங்களில் முன்னணி நடிகைளை பின்னுக்கு தள்ளிவிட்டு முன் வரிசைக்கு வந்திருக்கிறார் மமிதா பைஜூ. சில முன்னணி நடிகர்கள்கூட மமிதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சத்தமே இல்லாமல் ஒரு சாதனையை படைத்திருக்கிறார் மமிதா. இந்த ஆண்டு அவர் நடித்து வெளியான ஜனநாயகன், விஸ்நாத் அண்ட் சன்ஸ் படங்கள் 100 கோடியை தாண்டி வசூலித்தது.
இந்த வரிசையில் கடந்த வாரம் அவர் நடிக்பில் வெளியான மலையாளப் படமான 'பெத்லேகேம் குடும்ப யூனிட்' படம், 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகிற 3ம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. இதன் மூலம் 100 கோடி வசூல் படத்தில் ஹாட்ரிக் அடித்திருக்கிறார் மமிதா.
சென்ற ஆண்டு அவர் நடித்த 'டியூட்' படமும் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதனால் தற்போது மமிதாவிற்கு 100 கோடி ஹீரோயின், ராசியான நடிகை என்றும் அடையாளம் கிடைத்திருக்கிறது.
நிவின் பாலியை பொறுத்தவரை ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ள இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்பு வெளியான 'சர்வம் மாயா' படமும் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருந்தது. 'பெத்லேகேம் குடும்ப யூனிட்' படத்தில் சுரேஷ் கிருஷ்ணா, பிந்து பனிகர், வினய் போர்ட், ரோஷன் ஷாநவாஸ், ஷ்யாம் மோகன், ஷமீர் கான், ஸ்ரீண்டா, பார்வதி அய்யப்படாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.