உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனைவியை விவாகரத்து செய்தார் கன்னட நடிகர் துனியா விஜய்

மனைவியை விவாகரத்து செய்தார் கன்னட நடிகர் துனியா விஜய்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் துனியா விஜய். இவர் நாகரத்னா என்பவரை கடந்த 1999ல் திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, விஜய் முதலில் கடந்த 2013ம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார். இருப்பினும் கடந்த 2014ம் ஆண்டு இருவரும் சமரசமாகச் செல்ல முடிவெடுத்து, விவாகரத்து மனுவைத் திரும்பப் பெற்றார்.

அதற்கு பிறகு 2018ம் ஆண்டு குடும்ப நல நீதிமன்றத்தில் துனியா விஜய் மீண்டும் விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தற்போது இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதோடு துனியா விஜய் நாகரத்னாவுக்கு 2 கோடி ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும். அவரது 3 குழந்தைகளின் கல்வி உள்பட அனைத்து பராமரிப்பு செலவுகளையும் துனியா விஜய் ஏற்று கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது நீதிமன்றம்.

துனியா விஜய் விவாகரத்து கிடைக்கும் முன்பே கீர்த்தி என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !