திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள திருக்குட நன்னீராட்டு பெருவிழா யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் மற்றும் பூமி பூஜை இன்று (மே18) சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், கோயில் தக்கார் அருள்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.