உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாக உள்ள 'ஓம்'

தெலுங்கு, ஹிந்தியிலும் வெளியாக உள்ள 'ஓம்'

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில், தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓம்'.

இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் தலைப்பு அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் தலைப்பு அறிமுக டீசரை வெளியிட்டார்கள். நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் மட்டும் கலந்து கொண்டார். மற்ற கலைஞர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

'புஷ்பா' படம் மூலம் இந்த 'ஓம்' படமும் செம்மரக் கடத்தல் பற்றிய கதையாக இருக்கும் என தலைப்பு அறிவிப்பு டீசர் மூலம் புரிகிறது.

இப்படத்தின் அறிமுக டீசரை விரைவில் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியிட உள்ளதாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !