உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தங்க ஜாக்கெட் அணிந்து கவர்ந்த ஜான்வி கபூர்

தங்க ஜாக்கெட் அணிந்து கவர்ந்த ஜான்வி கபூர்

ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள். விதவிதமான, அழகான ஆடைகள் அணிந்து போட்டோ ஷுட் எடுத்து அடிக்கடி தனது இன்ஸ்டாவில் பதிவிடுபவர். அவரது ஸ்டைலிஷ் ஆடைகள், தோற்றம் ஆகியவற்றை ரசிக்கவே பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. கிளாமராக ஆடை அணிவதில் சிறிதும் தயக்கம் காட்ட மாட்டார்.

சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'பெத்தி' தெலுங்குப் படத்தில் கூட கிளாமருக்காக மட்டுமே ஜான்வி நடிக்க வைக்கப்பட்டார் என்ற சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் நடிகை அகன்ஷா ரஞ்சன் கபூர் திருமண நிகழ்வில் ஜான்வி அணிந்த தங்கத்தினால் ஆன ஜாக்கெட் மற்றும் அதற்கு மேட்சிங்கான ஸ்கர்ட், ஷால் ஆகியவை குறித்துத்தான் பெண்கள் அதிகம் பேசி வருகிறார்கள். தங்கத்தினால் ஆன அந்த ஜாக்கெட்டை மும்பையின் பிரபல டிசைனர் சுஹானி பரேக் உருவாக்கி உள்ளார்.

மாடர்ன் உடை, புடவை, பாவாடை தாவணி என எந்த ஆடை அணிந்தாலும் அது ஜான்விக்குப் பொருத்தமாக உள்ளது என்று சொல்பவர்கள்தான் அதிகம். இன்னும் தமிழ்சினிமா பக்கம்தான் வராமல் இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !