குழந்தையின் பெயரைத் தேர்வு செய்ய தனது பாலோயர்களின் உதவியை நாடும் சமந்தா!
தற்போது கர்ப்பமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது பாலோயர்களுடன் உரையாடினார். அப்போது பல தாய்மார்கள் தங்களது கர்ப்பகால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, தாய்மை குறித்த ஆலோசனைகளை வழங்கினர். இந்த உரையாடலின் போது, குழந்தைக்காக என்ன திட்டமிட்டுள்ளீர்கள்? என்று கேட்டதற்கு, குழந்தைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் ஏற்கனவே வாங்கிவிட்டதாக கூறிய சமந்தா, அவை அனைத்தையும் பார்க்கும்போது எனக்கு சற்று பதட்டமாக உள்ளது. அதனால் தற்போதைக்கு எல்லாவற்றையும் பேக் செய்து, அந்தப் பையை லேப்டாப் ஸ்டாண்டாகப் பயன்படுத்தி வருகிறேன் என்று கூறினார்.
தாய்மையடைவதால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சமந்தாவிடம் அவர்கள் கேட்டபோது, குழந்தைக்கு பால் ஊட்டுவது, தாலாட்டு பாடித் தூங்க வைப்பது உள்ளிட்ட அந்தத் தருணங்களை அனுபவிக்கத் தான் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறினார். இந்த விஷயங்கள் ஒரு முழுநேர வேலையாகிவிடும். இது ஒரு அழகான, அற்புதமான மற்றும் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு அனுபவமாகும் என்று சமந்தா கூறினார்.
அதையடுத்து குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்? என்று ஒரு பாலோயர் கேட்டபோது, பெயரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதில் உங்கள் அனைவரின் உதவியும் எனக்குத் தேவைப்படும் என்றார். அவரது இந்தப் பதில் தற்போது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. அதனால் குழந்தை பிறப்புக்கு பிறகு எங்களுக்கு தோன்றும் நல்ல பெயர்களை உங்களுடன் ஷேர் செய்கிறோம் என்று சமந்தாவிடம் தெரிவித்துள்ளார்கள்.